×

முதல் 2 கட்ட தேர்தலில் பதிவான, தொகுதி வாரியான வாக்கு பதிவு தரவுகளை உடனே வெளியிட வேண்டும்: திரிணாமுல் கோரிக்கை

புதுடெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமாருக்கு திரிணாமுல் காங்கிரஸ் கடிதம் அனுப்பியுள்ளது. அதில், மக்களவை முதலாவது, 2வது கட்ட தேர்தல்களில் பதிவான வாக்கு பதிவு விவரங்கள் கடந்த ஏப்.30ம் தேதி தாமதமாக கிடைத்தது. முதல் கட்டமாக, ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு சதவீதம் 60 என காட்டப்பட்டது. பின்னர் ஏப்ரல் 30-ம் தேதி ஒருங்கிணைந்த வாக்குபதிவு 66.14 என காட்டப்பட்டது.முதல் கட்டத்தின் இறுதி வாக்களிப்பு சதவீதம் வெளியிடுவதில் 11 நாள் தாமதம், 5.75 சதவீத வாக்குபதிவு அதிகரிப்பு, இரண்டாவது கட்டம் முடிந்து கிட்டத்தட்ட நான்கு நாட்களுக்குப் பிறகு வெளியானது. அதுவும் சரியான விளக்கம் எதுவும் இல்லாமல் வெளியிடப்பட்டதால் மக்கள் மனதில் சந்தேகங்கள் எழுகின்றன. எனவே, முதல் 2 கட்ட தேர்தலில் தொகுதி வாரியான துல்லியமான வாக்குபதிவு தரவுகளை உடனே வெளியிட வேண்டும். மேலும் தரவுகளை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதத்திற்கான விளக்கத்தையும் தெரிவிக்க வேண்டும்.

The post முதல் 2 கட்ட தேர்தலில் பதிவான, தொகுதி வாரியான வாக்கு பதிவு தரவுகளை உடனே வெளியிட வேண்டும்: திரிணாமுல் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Trinamool ,New Delhi ,Trinamool Congress ,Chief Election Commissioner ,Rajiv Kumar ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED இந்தியா கூட்டணியில் மம்தா இருப்பதை...